காஞ்சிரங்கால் ஊராட்சி
காஞ்சிரங்கால் | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
வட்டம் | சிவகங்கை வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சிவகங்கை |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 4,130 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
காஞ்சிரங்கால் ஊராட்சி (Kanjirangal Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4130 ஆகும். இவர்களில் பெண்கள் 2060 பேரும் ஆண்கள் 2070 பேரும் உள்ளனர்.
இந்தியப் பிரதமரின் பாராட்டு
[தொகு]இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அப்போது பல்வேறு சாதனையாளர்களை அவர் பாராட்டுவது வழக்கம். இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அந்த ஊராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள தெரு விளக்குகள் குப்பையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் மூலமே எரிகிறது. இதற்காக தினமும் 200 கிலோ வரை குப்பைகளை காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட அரசு இடத்தில் சேகரிக்கின்றனர். அங்கு குப்பைகள் மூலம் பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை தான் பிரதமர் மோடி இன்று பாராட்டி உள்ளார்.[7]
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 938 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 11 |
கைக்குழாய்கள் | 26 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 19 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | 1 |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 56 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 5 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 8 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | 1 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 112 |
ஊராட்சிச் சாலைகள் | 8 |
பேருந்து நிலையங்கள் | 1 |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 10 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
- அஜீஸ் நகர்
- அரசனேரி கீழமேடு
- எம்.ஜி.ஆர் .நகர்
- அரசனிபட்டி
- காமராஜ்நகர்
- சஞ்சய் நகர்
- தென்னலிவயல்
- இலந்தங்குடிபட்டி
- டி.புதூர்
- காஞ்சிரங்கால்
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "சிவகங்கை வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு". Archived from the original on 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.